8

நாடளாவிய ரீதியில் புங்குடுதீவு மாணவியின் வன் கொடுமைக்கு
எதிராக ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடந்து வருகிறது 23 /05/ 2015 திருமலையில்
தாயாக பெண்களுக்கும்.மாணவிகளுக்கும் சிறுமிகளுக்கும் எதிராக நாடளாவிய
ரீதியில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகவும், கண்டனம் தெரிவிக்கு முகமாக
மாபெரும் அமைதிப் பேரணி இன்று நடைபெற்றது.ஆயிரக்கணக்கான மக்கள்
கலந்துகொண்டனர்.பொக்கிஷத்தின் திருமலை மகளிர் அமைப்பினரும் கலந்து
கொண்டனர்.பேரணியில் பெண் சமூக அமைப்பினர்.மாணவர்கள்.தாய்மார்கள்
என பேரணியில் கலந்து கொண்டனர்.பேரணியில் கலந்துகொண்ட தாய்மார்
பெண்கள்.மாணவிகள்,சிறுமிகள் மிக மன அழுத்தத்துடன் கானப்படதாக
செய்திகள் மூலம் அறியப்படுகிறது.அத்துடன் இலங்கை அரசு உடனடியாக
பெண்களுக் கெதிரான வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டுமென
வலியுறுத்தினர்.சமூகப்பெண்கள் அமைப்பினர் சார்பாக மகஜர் இலங்கை அரசுக்கு
கையளிக்கப்பட்டது.

5163