அன்பான மக்களே பொக்கிஷம் உணவு ,கல்வி எனும்
இருபணிகள் செய்துவருவது நீங்கள் அறிந்ததே இன்று
29/04/2015 திருமலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான
இலவச வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது செல்வநாயகபுரம்
இந்து மஹா வித்தியாலயம்
இலக்கம்- 854, பாடசாலை வீதி, செல்வநாயகபுரம், திருகோணமலை,
120 மாணவ,மாணவிகள் பத்தாம் வகுப்பும், 90 மாணவர்கள் 5ம் வகுப்பு
புலமைப்பரிசில் வகுப்புக்களிலும்,கல்வி பயில்கின்றனர்
இன்னும் பலமாணவர்களின் வருகையும் உள்ளது.ஆசிரியர்களுக்கு அடிப்படை
ஊதியமே தற்போது தருவதாக நாம் தெரிவித்தோம்.அவர்களும் மனபூர்வமாக
சம்மதித்தனர்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நான்கு பாடங்களும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பாடங்களும் ஆரம்பிக்க பட்டுள்ளது திருமலையில் இன்னும் 400 மாணவர்கள் 10ம் வகுப்புக்கு விண்ணப்பித்துள்ளனர் என்ன செய்ய முடியும்?பொக்கிஷத்தால்? புலம்வாழ் திருமலை மக்களே!